×

வியாபாரி தூக்கிட்டு தற்கொலை

ஆறுமுகநேரி, டிச. 5:  ஆறுமுகநேரி அடுத்த ஆத்தூர் முத்தாரம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சக்திவேல் மகன் சந்தனகுமார் (28).  இவரது மனைவி பாலஇசக்கி. தம்பதிக்கு இரு மகன்கள். ஆத்தூரில் சொந்தமாக வெல்டிங் கடை நடத்திவந்த சந்தனகுமார், நேற்று மாலை 5 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாதபோது உத்திரத்தில் கயிற்றால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து விரைந்துசென்ற ஆத்தூர் போலீசார், சந்தனகுமாரின் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.  மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து குடும்ப பிரச்னையால் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கடன் பிரச்னையா என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Dealer ,suicide ,
× RELATED பிரபல கஞ்சா வியாபாரி கைது