திருநங்கையை வெட்டியவர் கைது

தூத்துக்குடி, டிச. 5:  தூத்துக்குடி  கதிர்வேல்நகரை சேர்ந்தவர் ஜீவன் (45). திருநங்கையான இவர், தனது தாய் மற்றும்  நண்பர்களான ஜான்சி (36), ஜானியா (30) ஆகியோருடன் வசித்து வருகிறார். கடந்த 2ம்  தேதி இரவு  தூத்துக்குடி கோக்கூரை சேர்ந்த பூச்சந்திரன்  மகனும் கூலித் தொழிலாளியுமான முருகதாஸ் (35) என்பவர் குடிபோதையில் வந்து ஜீவனின் வீட்டுக் கதவை தட்டியதோடு தரக்குறைவாகப் பேசினாராம். இதுதொடர்பாக  இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது.

இதில்  ஆத்திரமடைந்த முருகதாஸ், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் திருநங்கை  ஜீவனை வெட்டியதோடு கொலை மிரட்டல் விடுத்து தப்பியோடினார். இதில்  வெட்டுப்பட்ட ஜீவனை அக்கம்பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி சிப்காட்  போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  முருகதாஸ் மீது  ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
× RELATED காயமடைந்த முதியவர் சாவு