×

2 மாதமாக சம்பளம் இல்லை பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், டிச.5 : பி.எஸ்.என்.எல். நிரந்தர ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் வழங்கப்படாமல் இருக்கும் இரண்டு மாத சம்பள தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, நாடு முழுவதும் நேற்று பி.எஸ்.என்.எல். அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அசோசியேசன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நாகர்கோவிலில் பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, பி.எஸ்.என்.எல். சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் லெட்சுமண பெருமாள் தலைமை வகித்தார். அதிகாரிகள் சங்கம் சார்பில் ஆறுமுகம், செல்வராஜ், ஊழியர்கள் சங்கம் சார்பில் ராஜூ, ராஜேந்திரன், அச்சுதானந்த் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்க கோரிக்கை