மத்திய, மாநில அரசுகள் எம்சாண்ட் தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் சிவில் இன்ஜினியரிங் அசோசியேஷன் வலியுறுத்தல்

கன்னியாகுமரி, டிச. 5: தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி சிவில் இன்ஜினியரிங் அசோசியேஷன் சார்பில் தலைமை பண்புகள் மற்றும் தொழில்நுட்ப 3 நாள் கருத்தரங்கம் கன்னியாகுமரியில் தொடங்கியது. இதன் தொடக்க விழாவுக்கு மாநிலத் தலைவர் முரளிகுமார் தலைமை வகித்தார். கூட்டத்தில், கட்டுமானத் தொழிலில் மணல் தட்டுப்பாடு நீண்ட நாள்களாக நிலவுகிறது. மணலுக்கு மாற்று மூலப்பொருளான எம்சாண்ட் (கருங்கல் துகள்) பயன்படுத்தபட்டாலும் அதுவும் தாராளமாக கிடைப்பதில்லை. தட்டுப்பாடு இன்றி எம்சாண்ட் கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் 40 சதவீதம் வீட்டுமனைகள் அங்கீகாரம் இல்லாத நிலை உள்ளது. அவற்றை அரசு வரைமுறைப்படுத்த வேண்டும். அதேபோல் கட்டுமானத் தொழிலில் உள்ள பொறியாளர்கள் அரசு அனுமதி பெறுவதை எளிமையாக்க வேண்டும் என்பது உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Civil Engineering Association of India ,
× RELATED மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள...