×

மாதர் சங்கம் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தக்கலை, டிச.5:   ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் வன்முறையில்லா தமிழகம், போதையில்லா தமிழகம்  என்ற கோஷத்தை வலியுறுத்தி நடைபயணம் நடந்தது. இந்த நடைபயணத்தின்போது சென்னையில்  நிர்வாகிகள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தினர். இதை கண்டித்து தக்கலை வட்டார  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தாலுகா அலுவலகம் முன்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  வட்டார செயலாளர் சுஜா ஜாஸ்மீன் தலைமை வகித்தார்.  மாவட்டக்குழு உறுப்பினர்கள் சைமன் சைலஸ், சந்திரகலா ஆகியோர் பேசினர். இதில்  கிளைச் செயலாளர்கள் சுந்தரமணி, சிம்சன்,  உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Tags : attack ,Mather Association ,
× RELATED பெண்கள் விரோத அதிமுக ஆட்சி: உதயநிதி தாக்கு