மேட்டூரில் வீட்டில் பதுக்கிய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

மேட்டூர், டிச.4: மேட்டூரில், வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒரு டன் ரேஷன் அரிசியை, சப்கலெக்டர் சரவணன் மற்றும் அதிகாரிகள் நேற்று கண்டுபிடித்து, பிக்கப் வேனுடன் பறிமுதல் செய்தனர். மேலும, தப்பியோடிய பெண் உள்பட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.சேலம் மாவட்டம் மேட்டூர் சக்திநகர் 4வது தெரு மின்வாரிய குடியிருப்பில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்துள்ளதாக, மேட்டூர் சப்கலெக்டர் சரவணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், மேட்டூர் தாசில்தார் ஹசீன்பானு, வட்ட வழங்கல் அலுவலர் கிரிஜா ஆகியோருடன் சம்பவ இடத்துக்கு சென்ற சப்கலெக்டர் சரவணன், ரேஷன் அரிசி பதுக்கிய வீட்டை சோதனையிட்டனர். அங்கு 20 மூட்டைகளில் 1000 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிகாரிகள் சோதனையின்போது, பிக்கப் வேன் ஓட்டுநர் மற்றும் பெண் ஒருவர், அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.  பிடிபட்ட அரிசியின் மதிப்பு ₹25 ஆயிரம் இருக்கும் என வட்ட வழங்கல் அலுவலர் தெரிவித்தார். இதையடுத்து, சுமார் ஒரு டன் ரேஷன் அரிசியையும், பிக்கப் வேனையும் பறிமுதல் செய்த அதிகாரிகள்,  சேலம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேட்டூர் வட்டத்தில் 187 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றனர். ஓராண்டுக்கு முன்பு, மேட்டூர் தொழிலாளர் இல்லப்பகுதியில் ஏராளமான ரேஷன் அரிசி பிடிபட்டது.

தப்பியோடிவர்களை பிடித்து விசாரணை நடத்தினால் தான், எந்தெந்த ரேஷன் கடைகளில் இருந்து கள்ளத்தனமாக அரிசி வாங்கப்பட்டது என்றும், இதனை எங்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்தனர் என்பது குறித்தும் தெரியவரும். தமிழகத்தில் உள்ள இலவச வேட்டி சேலைகளை, சிலர் ஆந்திராவில் உள்ள ஜவுளிக்கடைகளில் வைத்து கூவி கூவி விற்பனை செய்வது போல, தமிழக ரேஷன் அரசி, கர்நாடகத்திற்கு கடத்துவதை தடுக்க முடியாமல் வருவாய்த்துறை, காவல் துறை அதிகாரிகள், அவர்களுக்கு உடந்தையாக இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

Related Stories:

>