நாளை 3ம் ஆண்டு நினைவுநாள் அனுசரிப்பு ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி

சேலம், டிச.4: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 3ம் ஆண்டு நினைவுநாளையொட்டி, சேலத்தில் உள்ள அவரது சிலைக்கு நாளை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்படுகிறது. சேலம் மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. முன்னாள் எம்பி பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராஜ், நடேசன், முன்னாள் மேயர் சவுண்டப்பன் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் எம்எல்ஏ கலந்து கொண்டு பேசுகையில், “முன்னாள் முதல்வரும், கழக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 3ம் ஆண்டு நினைவு நாள், நாளை(5ம் தேதி) அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் காலை அண்ணா பூங்கா, மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு, மாநகர் மாவட்ட கழகம் சார்பில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதில், நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளாக கலந்து கொள்ள வேண்டும். தொடர்ந்து, நாளை மாலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்திற்கு வருகிறார். பின்னர் 6ம் தேதியன்று,  ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் சேலம் மாநகர் மற்றும் புறநகர் நிர்வாகிகளுடன், உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனையில் ஈடுபடுகிறார். இதில், அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ள ேவண்டும்,” என்றார். கூட்டத்தில் மாநகர பொருளாளர் பங்க் ெவங்கடாசலம், பகுதி செயலாளர்கள் தியாகராஜன், யாதவ மூர்த்தி, சண்முகம், சரவணன், பாலு, முருகன், ஜெகதீஸ்குமார், பாண்டியன் மற்றும் கூட்டுறவு வங்கி தலைவர்கள், முன்னாள் மண்டலக்குழு தலைவர்கள், வார்டு செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>