மாவட்டத்தில்160 மி.மீ., மழை

சேலம், டிச.4: சேலம் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் 160 மில்லி மீட்டர் மழை பெய்தது. இம்மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.குமரி கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக மழை பெய்து வருகிறது. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் லேசான மழை பெய்கிறது. மழையால் சேலத்தில் தாழ்வான இடங்களில் மழைநீர் ஓடியது. சேலம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு(மில்லி மீட்டரில்) வருமாறு: வீரகனூர் 60, தம்மம்பட்டி 25, கெங்கவல்லி 22, ஆத்தூர் 21, பெத்தநாயக்கன்பாளையம் 11, காடையாம்பட்டி 7, ஏற்காடு 5, மேட்டூர் 4.2, வாழப்பாடி 3, கரியகோவில் 1, இடைப்பாடி 1, சேலம் 0.6 மில்லி மீட்டர் மழை பதிவானது. இம்மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: