கடம்பூர் அரசு பள்ளியில் அறிவியல் அறிஞர் பிறந்த நாள் விழா

கெங்கவல்லி, டிச.4: கெங்கவல்லி அருகே உள்ள கடம்பூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், இந்திய அறிவியல் அறிஞர் ஜகதீஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சிக்கு பள்ளி  தலைமை ஆசிரியர் செல்வம் தலைமை வகித்து பேசுகையில், தாவரங்களுக்கும் உயிர்  உண்டு என்ற உண்மையை உலகிற்கு உணர்த்தியவர் ஜகதீஷ் சந்திரபோஸ். கடந்த 1858ம்  ஆண்டு நவம்பர் 30ல் பங்களாதேஷில் பிறந்தார். இயற்பியல் அறிஞரான இவர்,  ரேடியோ அலைகளில் ஆய்வு செய்து, மார்க்கோனிக்கு முன்பே கம்பியில்லா  ஒலிபரப்பு அமைப்பினை கண்டுபிடித்தார். மாணவர்கள் இவரை போன்ற அறிவியல்  அறிஞர்களை தங்களது முன்னோடியாக வைத்து செயல்பட வேண்டும் என்றார். முன்னதாக  ஜகதீஷ் சந்திரபோஸ் உருவப்படத்திற்கு அவர் மாலை அணிவித்து மரியாதை  செலுத்தினார். அறிவியல் அறிஞர்களை முன்மாதிரியாக நினைத்து செயல்படுவோம்  என்ற உறுதிமொழியை மாணவ, மாணவிகள் எடுத்து கொண்டனர். மீனாம்பிகா அனைவருக்கும்  இனிப்புகள் வழங்கினார்.

Related Stories:

>