×

மாவட்டம் முழுவதும் 174 போலீசார் இடமாற்றம்

கிருஷ்ணகிரி, டிச.4: கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் 174 போலீசாரை இடமாற்றம் செய்து எஸ்பி பண்டி கங்காதர் உத்தரவிட்டுள்ளார்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, பர்கூர், ஊத்தங்கரை ஆகிய 5 உட்கோட்டங்கள் உள்ளன. இதில் 31 போலீஸ் ஸ்டேசன்களில் 800க்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றி வருகின்றனர். இதில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள், போலீசார் என மொத்தம் 174 பேரை இடமாற்றம் செய்து மாவட்ட எஸ்பி பண்டிகங்காதர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தில் கூறியது, இடமாற்றம் செய்யப்பட்ட போலீசார் அனைவரும் 3 ஆண்டுகள் ஒரே போலீஸ் நிலையத்தில் பணியாற்றியதால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது நிர்வாக ரீதியாக வழக்கமாக செய்யப்படும் இடமாற்றம் தான் என்றனர். இடமாற்றம் செய்யப்பட்ட 174 பேரில் உத்தனப்பள்ளி போலீஸ் நிலையத்தில் மட்டும் 13 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags : district ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...