கோயில் கும்பாபிஷேகம்

திருவெறும்பூர், டிச.4: திருவெறும்பூர் அருகே உள்ள பாப்பாகுறிச்சி பகுதியில் அமைந்துள்ள கோல்டன் சிட்டி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட மங்கள விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா நடந்தது. திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் சாலை பாப்பாகுறிச்சி பகுதியில் உள்ள கோல்டன் சிட்டியின் கோகுல் நகர் வளாகத்தில் புதிதாக மங்கல விநாயகர் ஆலயம் கட்டப்பட்டது. இவ்வாலயத்தில் நேற்று முன்தினம் காலை கும்பாபிஷேக விழா நடந்தது. இந்த விழாவில் கோகுல் நகர், வேங்கூர், பாப்பாகுறிச்சி, திருவெறும்பூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories:

>