அங்கன்வாடிக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர்கள் அச்சம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட திமுகவினர் விருப்ப மனு அளிப்பு கே.என்.நேரு ேநர்காணல் நடத்தினார்

திருச்சி, டிச. 4: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்த திமுகவினரிடம் மாவட்ட செயலாளர் கே.என்.நேரு நேற்று நேர்காணல் நடத்தினார்.திருச்சி மாவட்டத்தில் வரும் 27, 30ம் தேதிகளில் 2 கட்டமாக கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் கலைஞர் அறிவாலயத்தில் நேற்று காலை நேர்காணல் நடந்தது. தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு நேர்காணல் நடத்தினார்.மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி வடக்கு, தெற்கு ஒன்றியங்களில் ஒன்றிய குழு உறுப்பினர் பதவி மற்றும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிகளுக்கு மனு அளித்த சுமார் 300 பேர் கலந்து கொண்டனர். இதில் மாவட்ட துணை செயலாளர்கள் குடமுருட்டி சேகர், விஜயா ஜெயராஜ், ஒன்றிய செயலாளர்கள் ராமசாமி, சபியுல்லா, செல்வராஜ் மற்றும் பேரூர் தர்மலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாலை திருவெறும்பூர், மணிகண்டம், அந்தநல்லூர் ஒன்றியங்களை சேர்ந்தவர்களுக்கு நேர்காணல் நடந்தது.

துறையூர்: இதேபோல துறையூர் பாலக்கரையில் திமுக சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் தலைமையில் நகராட்சி, 2 பேரூராட்சி, துறையூர், உப்பிலியபுரம் ஒன்றியம், மாவட்ட கவுன்சிலர்களுக்கான விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்றது. எம்எல்ஏ ஸ்டாலின்குமார், மாவட்ட பொருளாளர் தர்மன் ராஜேந்திரன், அவைத்தலைவர் அம்பிகாபதி, நகர செயலாளர் முரளி, ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, முத்துச்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>