காதர்மொய்தீன் பேட்டி மணப்பாறை அருகே உடைந்து விழும் நிலையில் மின்கம்பம்

மணப்பாறை, டிச.4: மணப்பாறை அருகே உடைந்து விழும் நிலையில் மின் கம்பம் உள்ளதால் அங்கன்வாடிக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர்கள் தயக்கம்காட்டி வருகின்றனர்.மணப்பாறை அருகேயுள்ள மஞ்சம்பட்டி அந்தோணியார் கோயில் ெதரு அருகே அங்கன்வாடி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், 36 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த மையத்திற்கு அருகே துருப்பிடித்த மின்கம்பம் ஒன்று உடைந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. பலமுறை இக்குழந்தைகள் நலன் கருதி மின் கம்பத்தை மாற்றக் கோரி இப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ஆபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது பற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில், ஆபத்தான மின் கம்பம் இருப்பதால் குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்ப அச்சமாக உள்ளது என்றும் பருவமழை பெய்யும் இந்நேரத்தில், உடனடியாக மின் கம்பத்தை மாற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

Advertising
Advertising

Related Stories: