×

குழு பாட்டுப்போட்டியில் கெய்ன்ஸ் பள்ளி மாணவர்கள் சாதனை

நெல்லை, டிச. 4: வள்ளியூரில் நடந்த கிறிஸ்துமஸ் குழு பாட்டுப்போட்டியில் கெய்ன்ஸ் பள்ளி மாணவர்கள், 2ம் இடம் பிடித்துள்ளனர்.டி.கள்ளிகுளம் அதிசய பனிமாதா திருத்தலம் சார்பில், வள்ளியூரில் ‘மெரிஸ் பாய் சைல்ட்’ கிறிஸ்துமஸ் குழு பாட்டுப்போட்டிகள் நடந்தது. இதில் சுற்றுவட்டார தேவாலயங்கள் மற்றும் பள்ளிகளில் இருந்து குழுவினர் கலந்துகொண்டனர். போட்டியில் வள்ளியூர் ஆசீர்நகர் கெய்ன்ஸ் சிபிஎஸ்இ பாடகர் குழுவினர் 2ம் இடம் பிடித்தனர். இவர்களக்கு ரொக்கப்பரிசாக ரூ.7,500ம், கேடயமும் வழங்கப்பட்டது.வெற்றி பெற்ற குழுவினரை பள்ளி தாளாளர்கள் செல்வநாயகம், வசந்தா செல்வநாயகம், முதல்வர் பழனியம்மாள் மற்றும் பாடல் பயிற்சியாளர் பாராட்டினர்.



Tags : Cairns School ,
× RELATED யோகா போட்டியில் கெய்ன்ஸ் பள்ளி சாதனை