கிறிஸ்துமஸ் விசிடி வெளியீடு

நெல்லை, டிச. 4: நெல்லை சுத்தாங்க சுவிசேஷ சபையின் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துமஸ் நல்லதொரு செய்தி விசிடி வெளியீட்டு விழா, நெல்லை குட்நியூஸ் டைம் டிவி அலுவலகத்தில் நடந்தது. சேகரகுரு ஆல்பர்ட் கெர்சோன் ஜெபித்து விசிடியை வெளியிட்டார். நிகழ்ச்சியில் சேகரகுரு பிரட்ரிக்பால், சேகரகுரு யோசுவா, குட்நியூஸ் சகோ.சுந்தர், மருதகுளம் பேராலய முன்னாள் செயலாளர் அலெக்சாண்டர், முன்னாள் சபை ஊழியர் ஜெயசீலன், தயாரிப்பாளர்கள் முத்சவா ஜெயராஜ், எரேமியா மற்றும் சபை மக்கள் பலர் பங்கேற்றனர்.

Related Stories: