×

உள்ளாட்சித் தேர்தல் 8 ஊராட்சிகளில் 870 வாக்குச்சாவடிகள் ரெடி

தேனி, டிச. 4: தேனி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில், 870 வாக்குச்சாவடி மையங்களில் 4 லட்சத்து 85 ஆயிரத்து 448 பேர் வாக்களிக்க உள்ளனர்.  உள்ளாட்சித் தேர்தல் ஊராட்சி பகுதிகளில் மட்டும் வருகிற 27 மற்றும் 30ம் தேதிகளில் இருகட்டமாக நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி தேனி மாவட்டத்தில் 10 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள், தேனி, பெரியகுளம், போடி, ஆண்டிபட்டி, க.மயிலாடும்பாறை, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் உள்ளிட்ட எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 98 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்கள், 130 ஊராட்சி மன்றங்களுக்கான தலைவர் பதவியிடங்கள், 130 ஊராட்சிகளில் உளள் 1161 வார்டு கவுன்சிலர் பதவியிடங்கள் என மொத்தம் 1399 பதவியிடங்களுக்கான தேர்தல் வருகிற 27ம் தேதி மற்றும் 30 ம் தேதிகளில் இருகட்டமாக நடக்க உள்ளது. இதற்காக மாவட்டத்தில் 870 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 170 வாக்குச்சாவடி அமைக்கப்படுகின்றன. இதில் ஆண் வாக்காளர்கள் 48 ஆயிரத்து 327 பேரும், பெண் வாக்காளர்கள் 48 ஆயிரத்து 615 பேரும், திருநங்கைகள் 8 பேருமாக மொத்தம் 96 ஆயிரத்து 950 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். போடி ஊராட்சி ஒன்றியத்தில் 119 வாக்குச்சாவடி அமைக்கப்படுகின்றன. இதில் ஆண் வாக்காளர்கள் 29 ஆயிரத்து 695 பேரும், பெண் வாக்காளர்கள் 30 ஆயிரத்து 423 பேரும், திருநங்கைகள் 3 பேருமாக மொத்தம் 60 ஆயிரத்து 121 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தில் 97 வாக்குச்சாவடி அமைக்கப்படுகின்றன. இதில் ஆண் வாக்காளர்கள் 22 ஆயிரத்து 768 பேரும், பெண் வாக்காளர்கள் 23 ஆயிரத்து 273 பேரும், திருநங்கைகள் 7 பேருமாக மொத்தம் 46 ஆயிரத்து 48 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். கம்பம் ஊராட்சி ஒன்றியத்தில் 42 வாக்குச்சாவடி அமைக்கப்படுகின்றன. இதில் ஆண் வாக்காளர்கள் 10 ஆயிரத்து 563 பேரும், பெண் வாக்காளர்கள் 11 ஆயிரத்து 256 பேரும், திருநங்கைகள் ஒருவர் என மொத்தம் 21 ஆயிரத்து 920 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். க.மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் 115 வாக்குச்சாவடி அமைக்கப்படுகின்றன. இதில் ஆண் வாக்காளர்கள் 32 ஆயிரத்து 525 பேரும், பெண் வாக்காளர்கள் 31 ஆயிரத்து 664 பேரும், திருநங்கைகள் 4 பேருமாக மொத்தம் 64 ஆயிரத்து 193 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் 124 வாக்குச்சாவடி அமைக்கப்படுகின்றன. இதில் ஆண் வாக்காளர்கள் 41 ஆயிரத்து 750 பேரும், பெண் வாக்காளர்கள் 42 ஆயிரத்து 268 பேரும், திருநங்கைகள் 14 பேருமாக மொத்தம் 84 ஆயிரத்து 32 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.தேனி ஊராட்சி ஒன்றியத்தில் 111 வாக்குச்சாவடி அமைக்கப்படுகின்றன. இதில் ஆண் வாக்காளர்கள் 31 ஆயிரத்து 79 பேரும், பெண் வாக்காளர்கள் 31 ஆயிரத்து 950 பேரும், திருநங்கைகள் 4 பேருமாக மொத்தம் 63 ஆயிரத்து 43 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 92 வாக்குச்சாவடி அமைக்கப்படுகின்றன. இதில் ஆண் வாக்காளர்கள் 24 ஆயிரத்து 310 பேரும், பெண் வாக்காளர்கள் 24 ஆயிரத்து 523 பேரும், திருநங்கைகள் 8 பேருமாக மொத்தம் 49 ஆயிரத்து 141 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.  தேனி மாவட்டத்தில் உள்ள எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் 870 வாக்குச்சாவடி அமைக்கப்படுகின்றன. இதில் ஆண் வாக்காளர்கள் 2 லட்சத்து 41 ஆயிரத்து 117 பேரும், பெண் வாக்காளர்கள் 2 லட்சத்து 44 ஆயிரத்து 282 பேரும், திருநங்கைகள் 49 பேருமாக மொத்தம் 4 லட்சத்து 85 ஆயிரத்து 448 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

Tags : polling booths ,elections ,government ,
× RELATED வாக்கு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி தீவிரம்