×

மாநில கராத்தே போட்டி அல்ஹிக்மா மாணவர்கள் சாதனை

உத்தமபாளையம், டிச.4: மாநில அளவிலான கராத்தே போட்டிகளில் அல்ஹிக்மா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்தனர். மாநில அளவிலான கராத்தே போட்டிகள் கம்பத்தில் நடந்தன. இதில்  அல்ஹிக்மா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். இந்த போட்டிகளில் கட்டா பிரிவில் முகமதுஹாரீஸ், ஹாலீத், அப்துல்ரகுமான், முகமதுநவ்புல் நதீம் ஆகியோர் முதலிடத்தை பெற்று சாதனை படைத்தனர். குமிட்டே பிரிவில் முகமதுஆசிப், ரூபேஷ், முகமதுபாசித், முகமதுஅர்ஷத், மகிழன் ஆகியோர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்கள் தேசிய அளவிலான போட்டிகளுக்கு சென்றனர்.  வெற்றிபெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சியில்,  பள்ளியின் செயலாளர் முகமதுசைபுல் இஸ்லாம், முதல்வர் நூருல்ஷிபா, நிர்வாகஅலுவலர் சிந்தா மதார்மைதீன், கராத்தே பயிற்சியாளர் சிஹான் ராமகிருஷ்ணன், மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டினர்

Tags :
× RELATED மயிலாடும்பாறை காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா