ஒரத்தநாட்டில் 2 வீடுகளில் கொள்ளை முயற்சி

ஒரத்தநாடு, டிச. 4: ஒரத்தநாடு அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.ஒரத்தநாடு ஆர்வி நகர் பகுதியில் ஓய்வுபெற்ற ஆசிரியை ஏன்ஜல்ஸ் வசித்து வருகிறார். இவரது வீட்டில் நேற்று முன்தினம் இரவு யாரும் இல்லை. இதனால் நள்ளிரவில் கதவை உடைத்து கொண்டு மர்மநபர்கள் உள்ளே நுழைந்துள்ளனர். ஆனால் வீட்டில் நகை, பணம் சிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைநத மர்மநபர்கள், அங்கே வைக்கப்பட்டிருந்த கேமராவை திருடி சென்றனர்.இதேபோல் ஒரத்தநாடு தேரடி தெருவில் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ராஜேந்திரன் என்பவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பின்பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே சென்றனர். ஆனால் வீட்டில் நகை, பணம் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து ஏமாற்றத்துடன் மர்மநபர்கள் திரும்பி சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>