16 வீடுகள் சேதமடைந்த இடங்களில் தாசில்தார் ஆய்வு

திருவையாறு, டிச. 4: திருவையாறு பகுதியில் 16 வீடுகள் சேதமடைந்ததை தாசில்தார் இளம்மாருதி ஆய்வு செய்தார்.திருவையாறு பகுதியில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் கிராமங்களில் உள்ள கூரை வீடுகள் சேதமடைந்து வருகிறது. இந்நிலையில் அந்தளி, குழிமாத்தூர், கோனேரிராஜபுரம், நடுக்காவேரி, வெள்ளாம்பெரம்பூர், நாகத்தி, கீழத்திருப்பூந்துருத்தி, பெரும்புலியூர், செம்மங்குடி, திருப்பழனம் ஆகிய கிராமங்களுக்கு சென்று 13 கூரை வீடுகள், 3 ஓட்டு வீடுகளும் பகுதி சேதமடைந்துள்ளதை திருவையாறு தாசில்தார் இளம்மாருதி பார்வையிட்டார்.அதைதொடர்ந்து திருவையாறு பகுதியில் உள்ள நெற்பயிர்கள், வாழை, கரும்பு, வெற்றிலை கொடிக்கால் பாதிக்கப்பட்டுள்ளதா என்று பார்வையிட்டார். அப்போது மண்டல துணை தாசில்தார் விக்னேஷ் உடனிருந்தார்.

Advertising
Advertising

Related Stories: