×

தாந்தோணிமலை பகுதியில் குப்பை மேலாண்மை பணிகளில் தொய்வு

கரூர், டிச. 4: தாந்தோணிமலை பகுதியில்குப்பை மேலாண்மை பணிகள் தொய்வடைந்துள்ளது.கரூர் நகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. 2011ம் ஆண்டு முதல் கரூர் நகராட்சியுடன் இனாம் கரூர் நகராட்சி, தாந்தோணி நகராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன. நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் 400 பேரும், ஒப்பந்த அடிப்படையில் 200 பேரும் பணியாற்றி வருகின்றனர். துப்புரவு ஆய்வர்கள் 10 பேர், மேற்பார்வையாளர்கள் 17 பேர், லாரி ஓட்டுனர்கள் 16 பேர் பணியாற்றி வருகின்றனர். 130 டன்னுக்கு மேல் நாள்தோறும் நகராட்சி பகுதியில் குப்பை சேகரமாகிறது.குப்பை கூளங்களை அகற்றுவதற்காக 202 மூன்றுசக்கர சைக்கிள், 130 தள்ளுவண்டிகள், 6 டிப்பர் லாரிகள், டம்பர் பிளேசர் லாரிகள் 12, டம்பர் பின்கள் 220 பயன்படுத்தப்பட்டு வந்தன. இவைகள் பெரும்பாலும் பழுதாகி கிடக்கிறது.

தாந்தோணிமலை பகுதியில் 18 வார்டுகள் உள்ளன. இவைகளில் குப்பை அகற்றும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. ஒருநாள் அகற்றாவிட்டாலும் குப்பைகள் மலைபோல குவிந்து விடுகின்றன.கோயில் அன்னதான கூடங்கள் திருமண மண்டபங்கள் போன்ற இடங்களில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. மழைக்காலம் என்பதால் இவை மக்கி கொசு, ஈ போன்றவை உருவாகி சுகாதாரகேடு ஏற்படுகிறது.மேற்கண்ட பகுதிகளை ஆய்வுசெய்து அனைத்து பகுதிகளிலும் முறையாக குப்பைகளை சேகரம் செய்ய சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்புநேற்றுமுன்தினம் இரவு 7 மணி முதல் 8 மணி வரை ஒரு மணி நேரம் எம்ஜி சாலையில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெருக்கடி காரணமாக சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன.

Tags : area ,Thanthonimalai ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...