திருமங்கலம் அரசு மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தினம் அனுசரிப்பு

திருமங்கலம், டிச.4: திருமங்கலம் அரசு மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அரசு மருத்துவமனையில் ஏஆர்டி மையம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை மருத்துவர் பூமிநாதன் தலைமை வகித்தார். டாக்டர்கள் ராஜேஸ்கண்ணா, பானுமதி, வசந்தலட்சுமி முன்னிலை வகித்தனர். ஏஆர்டி மருத்துவர் டாக்டர் செல்வராஜ் மனோகரன் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து பேசுகையில், நம்நாட்டில் அரசு எடுத்துவரும் தொடர் விழிப்புணர்வு காரணமாக 70 சதவீத புதிய தொற்று குறைந்துள்ளதாகவும், எய்ட்ஸ் நோயாளிகள் உயிரிழப்புகளும் குறைந்து வருவதாக தெரிவித்தார். தொடர்ந்து டாக்டர்கள், நர்சுகள், பொதுமக்கள் எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு உறுதி மொழி எடுத்துகொண்டனர்.

Related Stories:

>