மதுரையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை, டிச. 4: மதுரையில் நேற்று மாவட்ட நீதிமன்றம் முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாட்டம் மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து 17 பேர் பலியான விவகாரத்தில் பாதிக்கப்பட்டோருக்காக போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்புலிகள் அமைப்பினர் தலைவர் வக்கீல் நாகை திருவள்ளுவன் கைது செய்யப்பட்டார். இதைக் கண்டித்தும், விபத்திற்கு காரணமான துணிக்கடை உரிமையாளர்களை கைது செய்யவும், பாதிக்கப்பட்டோருக்கு உரிய இழப்பீடு வழங்கவும் கோரி வக்கீல்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட நீதிமன்றத்தின் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வக்கீல் சின்னராஜா தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் வக்கீல்கள் இன்குலாப், வாஞ்சிநாதன், பாஸ்கர், அய்யப்பன், வேல்முருகன், மணிராஜ், அருள்ஜோசப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: