கொடைக்கானலில் புனித சவேரியார் பள்ளி நூற்றாண்டு விழா

கொடைக்கானல், டிச. 4: கொடைக்கானல் நாயுடுபுரத்தில் உள்ளது புனித சவேரியார் மேல்நிலைப்பள்ளி. இப்பள்ளி கடந்த 1919ம் ஆண்டு துவங்கப்பட்டது. 100 ஆண்டுகளை கடந்துள்ள இப்பள்ளியின் நூற்றாண்டு விழா நேற்று நடந்தது. பள்ளியின் தென்னிந்திய தலைவர் ரோஸ் சவரிமுத்து தலைமை வகித்தார். மதுரை மறைமாவட்ட முதன்மை குரு ஜெயராஜ், மாநில ஆலோசகர் அன்பரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தாளாளர் அருட்செல்வி வரவேற்றார். மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. முன்னதாக நடந்த சிறப்பு திருப்பலி பூஜைக்கு முதன்மை குரு ஜெயராஜ் தலைமை வகிக்க, வட்டார அதிபர் எட்வின் சகாயராஜ் முன்னிலை வகித்தனர். விழாவில் முன்னாள் மாணவர்கள், முன்னாள் ஆசிரியர்கள் நெகிழ்ச்சியுடன் சந்தித்து கொண்டனர். இதில் பீட்டர் சகாயராஜ், சேவியர் அருள் ராயன், ஆரோக்கியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: