×

மாவட்ட சதுரங்க போட்டி அல்ஹிதா பள்ளி மாணவி முதலிடம்

கூடலூர், டிச. 4:கூடலூரை அடுத்த தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட ஒற்றுவயல் பகுதியில் உள்ள அல்ஹிதா பள்ளியில் இரண்டாம் வகுப்பு,  ஐந்தாம் வகுப்புகளில் படிக்கும் நாஜியா, நாபிலா ஆகியோர்  ஊட்டி ஒய்எம்சிஏ சார்பில் நடத்தப்பட்ட சதுரங்க போட்டிகளில் கலந்து கொண்டு 11 வயதுக்கு உட்பட்ட பிரிவில் நாபிலா முதலிடமும், 9 வயதுக்கு கீழ் பிரிவில்  நாஜியா இரண்டாம் இடமும் பெற்றனர். இருவரும் சகோதரிகள். இவர்களையும், பயிற்சி அளித்த சதுரங்க ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Tags : Alhida School ,student ,
× RELATED சிவில் சர்வீஸ் தேர்வில் போட்டிகள்...