×

பணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது

கோவை, டிச.4:கோவை ராமநாதபுரம் ராமசாமிதேவர் வீதியை சேர்ந்தவர் குருசாமி(54). நஞ்சுண்டாபுரம் ரோட்டில் அரிசி மண்டி வைத்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு செல்ல தயாரானார். அப்போது பைக்கில் வந்த 2 மர்மநபர்கள் இவரை தாக்கி ரூ.ஆயிரம் பணத்தை பறிக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சியடைந்து அவர் சத்தம்போடவே அருகிலிருந்தவர்கள் ஓடி வந்து 2 பேரையும் பிடித்து தர்ம அடி கொடுத்து ராமநாதபுரம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர்கள் செல்வபுரம் வடக்கு ஹவுசிங்யூனிட்டை சேர்ந்த சரவணகுமார்(38), பேரூர் மெயின்ரோட்டை சே்ரந்த சஞ்சய்(38) என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.

Tags :
× RELATED வாலிபரை கட்டையால் தாக்கி பணம், செல்போன் பறிப்பு