தனியார் நிறுவனங்களில் ஆட்குறைப்பு, லே-ஆப் மத்திய, மாநில அரசுகள் தலையிடவேண்டும்

கோவை, டிச.4:  தனியார் நிறுவனங்களில் தொழிலாளர் சட்டவிதிகளுக்கு புறம்பாக மேற்கொள்ளப்படும் ஆட்குறைப்பு, லே-ஆப்  போன்ற நடவடிக்கைகளால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இந்த விசயத்தில் மத்திய மாநில அரசுகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்ட மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் ஐஎன்டியுசி தலைவர் பாலசுந்தரம் தலைமையில் சி.ஐ.டி.யு மில் சங்கத்தில் நேற்று நடந்தது. இதில் எச்.எம்.எஸ் சங்கத்தின் ராஜாமணி, வீராசாமி, சிஐடியு  மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஆறுமுகம், ஏஐடியுசி  தங்கவேல், எல்பிஎப் ஆனந்தன், எஸ்டிடியு ரகுபுஸ்திரியா, ஐஎன்டியுசி மதியழகன், எம்எல்எப் ஷாஜகான், பாலசுப்ரமணியன், செல்வராஜ், அருணகிரிநாதன், லூயிஸ் உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்கள் கலந்து  கொண்டனர்.

Advertising
Advertising

இந்த கூட்டத்தில், கோவை மாவட்டத்தில் உள்ள பல தொழில் நிறுவனங்களில் வாரத்தில் நான்கு நாட்கள்  மூன்று நாட்கள் மட்டுமே தொழிலாளர்களுக்கு பணி வழங்கப்படுகிறது. இதனால்  தொழிலாளர்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். எனவே  தற்காலிக வேலை இழப்பு, ஆட்குறைப்பு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் போது  அந்நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய சட்டப்படியான நடைமுறைகளை  பின்பற்றவேண்டும். சம்பந்தப்பட்ட நிறுவனம் சீரடையும் வரை அந்த தொழில்களையே  நம்பி இருக்கும் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

நாடு எதிர்கொண்டு வரும் தொழில் நெருக்கடியை சரிசெய்ய போர்க்கால அடிப்படையில்  மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஒரு நம்பகமான குழுவை  உருவாக்கி நிதிப் பற்றாக்குறையை போக்கி, தொழில் நிறுவனங்கள் முழுமையாக  இயங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: