மில் அதிபர் மகளுக்கு வரதட்சணை கொடுமை

கோவை, டிச.4: கோவை மில் அதிபர் மகளை வரதட்சணை கொடுமை செய்ததாக கணவர் உட்பட 3 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை ராமநாதபுரம் கிருஷ்ணசாமி நகரை சேர்ந்தவர் சுப்ரமணியம், மில் அதிபர். இவருடைய மகள் சுகன்யா(28), எம்.பி.ஏ. பட்டதாரியான இவருக்கும், மதுரை தபால்தந்தி நகரை சேர்ந்த சுந்தரகிருஷ்ணன் மகன் ராஜகுரு (31) என்பவருக்கும் கடந்த 26.7.2017ல் திருமணம் நடந்தது. இந்நிலையில் சுகன்யா, கோவை ராமநாதபுரம் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில், எனது கணவர் ராஜகுரு அரசு போக்குவரத்து கழக பணிமனைகளுக்கு பஸ்களுக்கான உபகரணங்கள் சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார்.  திருமணத்தின்போது 300 பவுன் நகை, ரூ.20 லட்சம், 12 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.80 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் ஆகியவற்றை எனது பெற்றோர் வரதட்சணையாக வழங்கினர்.

இந்நிலையில் தற்போது ஷோரும் வைக்க வேண்டும். அதனால் உனது பெற்றோரிடம் சென்று மேலும் பல லட்சம் ரூபாய் வாங்கி வரும்படி எனது கணவர் ராஜகுரு, மாமனார் சுந்தரகிருஷ்ணன், மாமியார் உமா ஆகியோர் என்னை கடந்த 4.9.2019 அன்று வீட்டில் இருந்து துரத்தியடித்து விட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், ராஜகுரு, அவருடைய தந்தை சுந்தரகிருஷ்ணன், தாயார் உமா ஆகியோர் மீது  வரதட்சணை கொடுமை, கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: