மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக, அமமுகவை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்

கோவை, டிச.4: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கோவை தெற்கு மாவட்ட தொழிலதிபர் பழனியூர் விஜயகுமார் தலைமையில் அதிமுக, அமமுக மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் நேற்று திமுகவில் இணைந்தனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று அண்ணா அறிவாலயத்தில் கோவை தெற்கு மாவட்டம், தொழிலதிபர் பழனியூர் விஜயகுமார் தலைமையில்  கோட்டூர் பேரூர்  அ.தி.மு.க.வைச் சேர்ந்த 4வது வார்டு அவைத்தலைவர் ஜோதிவேல், 12வது வார்டு அவைத்தலைவர் நாகமணி, 5வது வார்டு பேக்கரி பாபு, 12வது வார்டு முன்னாள் கவுன்சிலர் மருதாள், 14வது வார்டு பிரதிநிதி ராஜன், ஆழியார் மீன் மாணிக்கம், கண்ணம்பாளையம் பேரூர் அ.தி.மு.க.வைச் சேர்ந்த 5வது வார்டு பொருளாளர் ஜெகநாதன், 5வது வார்டு பிரதிநிதி கார்த்திகேயன், எம்.ஜி.ஆர்.பேரவை செயலாளர் மதன்குமார் மற்றும் 9வது வார்டு பொருளாளர் முத்துமாணிக்கம் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும், பழங்குடியினர் என 500க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

அப்போது, திமுக பொருளாளர் துரைருமுகன், கோவை தெற்கு மாவட்டக்  பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், மாவட்ட இலக்கிய அணி தலைவர் கோட்டூர் பால்ராஜ், மாவட்ட ஆதி திராவிடர் நலக்குழு அமைப்பாளர் தேவேந்திரன், கண்ணம்பாளையம் பேரூர்க்கழகப் பொறுப்பாளர் சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.
Advertising
Advertising

Related Stories: