தடகளப் போட்டியில் வேளாளர் வித்யாலயா பள்ளி மாணவிகள் தங்கம் வென்றனர்

ஈரோடு, டிச. 4: சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற 24வது தேசிய அளவிலான தடகளப் போட்டி சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள ஆலென் பப்ளிக் பள்ளியில்  நடந்தது. இப்போட்டியில் வேளாளர் வித்யாலயா பள்ளி மாணவிகள் கலந்துகொண்டு 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 4*100 தொடர் ஓட்டப்போட்டியில் அக்ஷயா, வர்ஷினி, வருணா, அவந்திகா, பிரின்ஸ் எஸ்தர் ஹெனா ஆகியோர் தங்க பதக்கத்தையும், 17 வயதிற்குட்பட்டோர் பிரிவில் அபிநயா வெண்கலப் பதக்கம் வென்றனர்.  பள்ளியின் தலைவர் கந்தசாமி, தாளாளர் சந்திரசேகர், இயக்குநர் பாலசுப்பிரமணியம், முதன்மை முதல்வர் நல்லப்பன், முதல்வர் பிரேமலதா, துணை முதல்வர் பிரியதர்ஷினி, நிர்வாக மேலாளர் முத்து, மக்கள் தொடர்பு அலுவலர் கார்த்திகேயன் மற்றும் ஆசிரியை, ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும், இச்சாதனைக்கு உறுதுணையாய் இருந்த உடற்கல்வி ஆசிரியர்களான வேடியப்பன், மணிகண்டன், ஜெகவீரபாண்டியன், பிரியா ஆகியோரைப் பாராட்டினர்.

Advertising
Advertising

Related Stories: