லாட்டரி, மது விற்ற 2 பேர் கைது

ஈரோடு, டிச. 4:  பவானி பழனிபுரத்தை சேர்ந்தவர் முருகேசன் (45). இவர் அந்தியூர் தேர்வீதியில் நேற்று முன்தினம் நடந்து சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த பவானி காடையம்பட்டி, கிழக்கு வீதியை சேர்ந்த ராசு மகன் தினேஷ் (25) என்பவர் லாட்டரி சீட்டு வாங்கச்சொல்லி வற்புறுத்தி இருக்கிறார். முருகேசன் மறுக்கவே கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து அந்தியூர் போலீசில் முருகேசன் அளித்த புகாரின் பேரில் வாலிபர் தினேசை போலீசார் கைது செய்தனர். இதே போல பெருந்துறை அடுத்துள்ள சீனாபுரம் பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்டிருந்த பெருந்துறை கள்ளியம்புதூர் ரோட்டை சேர்ந்த சக்தி என்கிற சக்திவேல் (50) என்பவரை போலீசார் கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories:

>