×

பொன்.புதுப்பட்டியில் குண்டும், குழியுமான சாலையால் மாணவிகள் அவதி

பொன்னமராவதி,டிச.4: பொன்னமராவதியில் உள்ள பொன்.புதுப்பட்டி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொன்னமராவதி-புதுக்கோட்டை மெயின்ரோட்டில் பொன்.புதுவளவு பேருந்து நிறுத்தத்தில் இருந்து அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வழியாக வலையபட்டி மலையாண்டி கோயில் செல்லும் சாலை ஏற்கனவே குண்டும், குழியுமாக உள்ளது.

தற்போது தொடர் மழைபெய்து வருவதால் இந்த சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு மழை நீர் தேங்கி உள்ளது. இதனால் மாணவிகள் சைக்களில் மற்றும் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த சாலை வழியாக செல்லும் மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சிரமமின்றி சென்று வர இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என மாணவர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : pit ,Pudupatti ,pit road ,
× RELATED புதுப்பட்டி ஊராட்சியில் அரசு வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி