×

போக்குவரத்து பாதிப்பு அறிவியல் வினாடி வினா பொறையார் பள்ளி முதலிடம்

தரங்கம்பாடி, டிச.4: நாகை மாவட்டம், பொறையாரில் உள்ள சர்மிளா காடஸ்பள்ளி மண்டல அளவில் நடந்த அறிவியல் வினாடி வினா போட்டியில் முதலிடம் பெற்றது. தமிழ்நாடு அறிவியல் கழகம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முறையே துளிர் மற்றும் ஜந்தர் மந்தர் என்கிற அறிவியல் வினாடி வினாவை மாநில அளவில் நடத்தி வருகின்றது. பள்ளிகளுக்கிடையே வட்ட அளவில் துவங்கி மாவட்ட, மண்டல, மாநில அளவில் நடத்தி வருகிறது. மண்டல அளவிலான வினாடி வினா கடந்த சனிக்கிழமை திருச்சி காவேரி மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. திருச்சி மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலிருந்தும் முதலிடம் பிடித்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். நாகப்பட்டினம் மாவட்டம் பொறையாரிலுள்ள சர்மிளா காடஸ் எஸ்.எம்.மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியின் அணியினர் சீனியர் பிரிவில் முதலிடம் பிடித்து மாநில போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்ற 10 ம் வகுப்பு மாணவி புகழ், 9 ம் வகுப்பு மாணவர்கள் செல்வகாந்தன், குகராஜ் ஆகியோருக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில துணைத் தலைவர் சுகுமாரன் மற்றும் திருச்சி மாநகர கல்வி அலுவலர் ஜெயலட்சுமி ஆகியோர் கேடயமும், சான்றிதழ்களும் வழங்கினார்கள்.
பரிசு பெற்ற மாணவ மாணவிகளையும் வழிகாட்டி ஆசிரியர் லஷ்மிபிரபாவையும் பள்ளி முதல்வர் பாண்டியராஜன் மற்றும் தமிழ்நாடு அறிவியல் கழகத்தின் மாவட்ட செயலர் சந்தோஷ் காட்சன் பாராட்டினர்.

Tags : Traffic Impact Science Quiz Engineer School ,
× RELATED பொறையாரில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தேர்தல் விழிப்புணர்வு முகாம்