×

நீடாமங்கலம் காமராஜர் காலனியில் தேங்கியிருந்த மழைநீர் அகற்றம்

நீடாமங்கலம்,டிச.4: தினகரன் செய்தி எதிரொலியால் காமராஜர் காலனியில் தெருவில் சூழ்ந்துள்ள மழை நீரை மினி மோட்டார் உதவியுடன் அகற்றும் பணி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பேரூராட்சி காமராஜர்காலனி,காமாரஜர் நகர்,புதுத்தெரு,ஒரத்தூர் ,பொதக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள வீடுகளை மழை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் வெளியில் கூட வர முடியாத நிலையில் மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர்.பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் சிறுவர்கள் தண்ணீரில் விளையாடிமகிழ்ந்தனர். நீடாமங்கலம் பேரூராட்சி காமராஜர் காலணியில் சரியான வடிகால் வசதி இல்லாதால் தெருக்களில் தண்ணீர் தேங்கியுள்ளதண்ணீரால் கொசு தொல்லை அதிகம் உள்ளது.இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என கடந்த 1ம் தேதி தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது.

தினகரன் செய்தி எதிரொலியான திருவாரூர் மாவட்டமண்டல அலுவலர் மற்றும் பிற்படுத்தப்பட்ட நல அலுவலர் ஜெயராஜ்,நீடாமங்கலம் தாசில்தார் கண்ணன்,பேரூராட்சி செயல் அலுவலர் முருகேசன் ,வருவாய் ஆய்வாளர் கதிரவன் காமராஜர் காலணி தெருவில் தேங்கியுள்ள தண்ணீரை பார்வையிட்டு உடனடி நடவடிக்கை எடுத்து தண்ணீரை மினி மோட்டார் மூலம் அகற்றும் பணியை தொடங்கினர்.உடனடி நடவடிக்கை எடுத்து படத்துடன் செய்தியை வெளியிட்ட தினகரன் நாழிதழுக்கும் ,அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

Tags : Needamangalam Kamarajar Colony ,
× RELATED தமிழ்பல்கலை கழகத்தில்...