ஓட்டப்பிடாரம் அருகே லாரியில் ஏற்றப்பட்ட ஜேசிபி மோதி பழமைவாய்ந்த புளியமரம் சாய்ந்தது

ஓட்டப்பிடாரம், டிச.4: குறுக்குச்சாலையில் லாரியில்  ஏற்றப்பட்ட ஜேசிபி இயந்திரம் மோதியதில் பழமைவாய்ந்த புளியமரம் சாய்ந்து விழுந்தது.  ஓட்டப்பிடாரம் அருகே குறுக்குச்சாலையில் இருந்து ஓட்டப்பிடாரம் செல்லும் பிரதான சாலையில் தெற்கு  பகுதியில்  மிகவும் பழமைவாய்ந்த புளியமரம் இருந்து வந்தது. கடந்த சில தினங்களாக  பெய்துவந்த மழையால் மரத்தின் அடிப்பகுதியில் மண் அரிப்பு உருவானது. இதனருகே ஜேசிபி இயந்திரம்  ஏற்றப்பட்ட நிலையில் லாரி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த  லாரியை நேற்று காலை  ஓட்டப்பிடாரம் சாலைக்கு கொண்டுசெல்ல இயக்கும்பொருட்டு பின்னால் வந்தபோது எதிர்பாராதவிதமாக ஜேசிபியின் முன் பக்க பகுதியானது புளிய  மரத்தில் இடித்துவிட்டது. அதனால் அம்மரம் சாய்ந்து விழுந்தது. இருப்பினும் மரத்தருகே யாரும் இல்லாததால் அசம்பாவிதம் ஏதும்  ஏற்படவில்லை.  தகவலறிந்து வந்த ஓட்டப்பிடாரம் போலீசார், நெடுஞ்சாலைத்துறையினர் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன்  வெட்டி அகற்றினர். இருப்பினும் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகனஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர்.

Advertising
Advertising

Related Stories: