ஆறுமுகநேரியில் நிலவேம்பு குடிநீர் வழங்கல்

ஆறுமுகநேரி, டிச. 4:   ஆறுமுகநேரியில் வியாபாரிகள் ஐக்கிய சங்கத்தின் சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. ஆறுமுகநேரியில் வியாபாரிகள் ஐக்கிய சங்கத்தின் சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஆறுமுகநேரி சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் முருகபொற்செல்வி தலைமை வகித்து நிலவேம்பு குடிநீர் வழங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். சங்கத்தின் தலைவர் தாமோதரன், துணைச்செயலாளர் சேர்மலிங்கம், பொருளாளர் ராஜாராம், நிர்வாகிகள் பூபால்ராஜன், ஆதிசேஷன் முன்னிலை வகித்தனர். சங்க நிர்வாகி விகேஎம் பாஸ்கரன் வரவேற்றார். மருத்துவ அலுவலர் டாக்டர் சீனிவாசன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர் மகாராஜன், ஆறுமுகநேரி சித்தா மருத்துவ பிரிவு முனியசாமி ஆகியோர் நிலவேம்பு குடிநீர் பயன்களை குறித்து விளக்கினர். வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: