சாத்தான்குளம் நூலகத்தில் புரவலர் சேர்ப்பு

சாத்தான்குளம், டிச. 4:  சாத்தான்குளம் ராமகோபாலகிருஷ்ணபிள்ளை  நூலகத்தில் ஓய்வுபெற்ற நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் தர்மராஜ் நூலக பெரும்புரவலராக இணைந்தார்.  சாத்தான்குளம் ராமகோபாலகிருஷ்ணபிள்ளை அரசு கிளைநூலகத்தில் ஓய்வுபெற்றநெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் தர்மராஜ், ஏற்கனவே ரூ1000 செலுத்தி   நூலகபுரவலராக உள்ளார். இதையடுத்து  மீண்டும்  ரூ.5000  நூலக வளர்ச்சிக்கு செலுத்தி  நூலகத்தில் பெரும்புரவலராக  சேர்த்து கொண்டார். நூலகத்தில்  சேர்ந்த அவருக்கு  நூலகர் சுப்பிரமணியன், வாசகர்வட்டதுணைதலைவர் பொறியாளர் கனகராஜ், நூலக புரவலர்கள் ஈஸ்வர்சுப்பையா,ராஜதுரை, குணசேகர் சண்முகசுந்தரம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertising
Advertising

Related Stories: