×

நிரம்பி வழியும் மணிமங்கலம் ஏரி தடையை மீறி குளிக்கும் பொதுமக்கள்

ஸ்ரீபெரும்புதூர், டிச.4: குன்றத்தூர் ஒன்றியம் மணிமங்கலம் பகுதியில் 1149 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி உள்ளது. பொதுப்பணித் துறை கட்டுபாட்டில் உள்ள இந்த ஏரி சுற்றுவட்டார பகுதியில் உள்ள சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாக உள்ளது. 10 மதகுகள், 3 கலங்கல்கள் கொண்ட இந்த ஏரியின் கரைகள்,கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பலப்படுத்தி சீரமைக்கபட்டன. மேலும் ஏரி நீரை சென்னை புறநகர் பகுதி மக்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரிய ஏரிகளில் ஒன்றான மணிமங்கலம் ஈசா ஏரி கடந்த மாதம் முழுவதும் வறண்டு காணப்பட்டது. கடந்த சில நாட்களாக பெய்துள்ள மழையால், ஏரியில் தண்ணீர் நிரம்பி கலங்கல் வழியாக உபரிநீர் வெளியேறுகிறது. இதை காண ஏராளமானோர், குழந்தைகளுடன் வருகின்றனர். அப்போது, ஆபத்தை உணராமல் கலங்களில் குளிக்கின்றனர். இதனை தடுக்க போலீசார் ஏரி மற்றும் உபரிநீர் வெளியேறும் பகுதியில் குளிக்கவோ, அருகில் சென்று பார்க்கவோ கூடாது என எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். ஆனாலும் பொதுமக்கள் அதை பொருட்படுத்தாமல் காலை முதல் மாலை வரை உபரிநீர் வெளியேறும் பகுதியில் குளிக்கின்றனர்.

Tags : Civilians ,Manimangalam Lake ,
× RELATED சிறுத்தை நடமாட்டம்: மக்களுக்கு வனத்துறை கோரிக்கை