ரவுடியை கொல்ல திட்டமிட்ட மேலும் ஒருவர் கைது

திருக்கனூர், டிச. 4:  புதுவை திருக்கனூர் அருகே செல்லிப்பட்டு மேம்பாலம் அருகே கடந்த 24ம் தேதி இரவு 2 பைக்குகள் எரிக்கப்பட்டு கிடந்தது. இது குறித்து திருக்கனூர் இன்ஸ்பெக்டர் கண்ணன், எஸ்ஐக்கள் சிவக்குமார், குமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், வில்லியனூர் அருகே பிள்ளையார்குப்பத்தை சேர்ந்த ரவுடி அருண்குமார் தரப்பினருக்கும், துத்திப்பட்டு காலனியை சேர்ந்த மற்றொரு ரவுடியான வெறி பிரதாப் தரப்பினருக்கும் ஏற்பட இருந்த மோதல் சம்பவத்தில் வெறி பிரதாப் கூட்டாளிகளின் 2 பைக்குகளை அருண்குமார் தரப்பினர் எரித்தது தெரியவந்தது. இதையடுத்து 2 தரப்பினரையும் போலீசார் தேடினர்.

Advertising
Advertising

இதில் வெறி பிரதாப்பை ைகது செய்தனர். அவரிடம் இருந்து பயங்கர ஆயுதங்களை கைப்பற்றினர். அருண்குமாரை கொல்ல திட்டமிட்டதை முன்கூட்டியே அறிந்து தன்னையும், தனது கூட்டாளிகளையும் தீர்த்துக் கட்ட பயங்கர ஆயுதங்களுடன் அவர்கள் துரத்தியதாகவும், இதனால் உயிருக்குப் பயந்து பைக்குகளை போட்டு விட்டு தப்பியதாகவும், நாங்கள் சிக்காததால் தங்களது பைக்குகளை அருண்குமார் தரப்பினர் பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டதாகவும் வெறி பிரதாப் போலீசில் தெரிவித்துள்ளார். மேலும் அருண்குமாரை கொலை செய்யும் முடிவில் உறுதியாக இருந்து, கொடாத்தூர் கைக்கிளப்பட்டு ரோட்டில் ஆயுதங்களுடன் திட்டமிட்டபோது வெறிபிரதாப் போலீசில் சிக்கியுள்ளார்.இதையடுத்து அவனது கூட்டாளிகளை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் அவனது கூட்டாளியான தொண்டமாநத்தம் மாங்குளம் வீதியை சேர்ந்த சூரிய பிரசாத் என்ற பாம் சூர்யாவை (22) போலீசார் நேற்று கைது செய்தனர். அவன் மீது கோரிமேடு மற்றும் சேதராப்பட்டு காவல்நிலையங்களில் வெடிகுண்டு வழக்கும், வில்லியனூரில் அடிதடி வழக்கும் உள்ளன. தொடர்ந்து, பாம் சூர்யாவை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Related Stories: