புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ₹3 லட்சம் நிதி உதவி

கள்ளக்குறிச்சி, டிச. 4:

கள்ளக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட சேலம் மாவட்டம் கெங்கவள்ளி நடுவலூர் பகுதியை சேர்ந்த பெரியசாமி மனைவி ஜானகி(40). இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஏழை குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் மேல் சிகிச்சை மேற்கொள்ள போதிய பணம் இல்லாததால் சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்பட்டு அவதப்பட்டு வந்தார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கள்ளக்குறிச்சி திமுக எம்பி டாக்டர் கவுதமசிகாமணியிடம் நேரில் முறையிட்டு மேல் சிகிச்சை பெற பிரதமர் நிவாரண நிதி மூலம் நிதி ஏற்பாடு செய்து தருமாறு ஜானகி உறவினர்கள் கோரிக்கை மனு அளித்தனர். இதனையடுத்து கவுதமசிகாமணி எம்பி கடிதம் மூலம் மத்திய அரசுக்கு வலியுறுத்தினார். அதனை பரிசீலனை செய்து ஜானகி மருத்துவ சிகிச்சைக்காக ரூ.3 லட்சம் மருத்துவ நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஜானகி மற்றும் அவரது குடும்பத்தினர்  கவுதமசிகாமணி எம்பிக்கு நன்றி தெரிவித்து கொண்டனர். இதுபோன்று கடந்த மாதம் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் பகுதியை சேர்ந்த காவேரி என்ற பெண்ணுக்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த நிலையில் அவர் மேல் சிகிச்சை பெற மத்திய அரசு மூலம் ரூ.3 லட்சம் நிதி உதவியை திமுக எம்பி டாக்டர் கவுதமசிகாமணி பெற்று தந்தார் என்பது குறிப்பிட்ட

தக்கது.

Related Stories:

>