திருவெண்ணெய்நல்லூர் அருகே மின்சாரம் தாக்கி இளம்பெண் பலி

திருவெண்ணெய்நல்லூர், டிச. 4: திருவெண்ணெய்நல்லூர் அருகே மின்சாரம் தாக்கி இளம்பெண் பலியானார்.விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலை இந்திராநகர் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் மனைவி சுபாஷினி(28). இவர்களுக்கு அமுதன்(4),  ஸ்ரீவினிதன்(3) என்ற இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று காலை முதல் பேரங்கியூர் முழுவதும் மின்சாரம் இல்லாததால் மாலை மின்சாரம் வந்தவுடன் சுபாஷினி மின்விளக்கு போடுவதற்காக சுவிட்ச்சை ஆன் செய்ய தொட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி இளம்பெண் தூக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்துள்ளார். அவரை உறவினர்கள் மீட்டு இருவேல்பட்டு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்ற அவர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுபற்றி அவரது உறவினர் திருவெண்ணெய்நல்லூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Advertising
Advertising

Related Stories: