×

அதங்கோடு சாரபழஞ்சி வேளாண்மை கூட்டுறவு சங்க இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் வெற்றி

களியக்காவிளை, டிச.4: அதங்கோடு சாரபழஞ்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது.களியக்காவிளை அடுத்த அதங்கோடு, சாரப்பழஞ்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் 4 ஆயிரத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர். கடந்த முறை நடந்த கூட்டுறவு சங்கங்களுக்கான நிர்வாகிகள் தேர்தலில் இந்த சங்கத்தை அதிமுகவினர் கைப்பற்றினர். தொடர்ந்து வெற்றி பெற்ற நிர்வாகிகள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி இன்னொரு தரப்பினர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். கோர்ட் விசாரணையில் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டதால் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதை தொடர்ந்து இந்த கூட்டுறவு சங்கத்திற்கான தலைவர் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான இடைத்தேர்தல் சங்க வளாகத்தில் வைத்து நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அதிமுக, காங்கிரஸ், தேமுதிக ஆகிய நான்கு அணியினர் போட்டியிட்டனர். இத்தேர்தலில் மொத்தம் 3513 வாக்காளர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. இதில் 2257 வாக்குகள் பதிவாயின. பதிவான வாக்குகள் எண்ணும் பணி கூட்டுறவுத் துறை அதிகாரிகளால் சங்க அலுவலகத்தில் வைத்து நடந்தது.இதில் தங்கமணி தலைமையிலான மார்க்சிஸ்ட் அணியினர் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர். தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது களியக்காவிளை போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்ெகாண்டிருந்தனர். வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அணியினர் கட்சி நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதைத்தொடர்ந்து நேற்று அவர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.

Tags : victory ,Marxist ,by-election ,Agricultural Cooperative Society ,
× RELATED சிறப்பு குழு ஆளுநரை தேர்வு செய்யும்:...