×

திருவண்ணாமலையில் தீபத்திருவிழா 3ம் நாள் உற்சவம் சிம்ம வாகனத்தில் அண்ணாமலையார் பவனி குளிரையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் திரண்டு தரிசனம்

திருவண்ணாமலை, டிச.4: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவின் 3ம் நாளான நேற்று, பூத வாகனத்தில் சந்திரசேகரரும், சிம்ம வாகனத்தில் அண்ணாமலையாரும் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவின், ஒவ்வொரு நாள் விழாவுக்கும் தனித்துவமிக்க பொருள் உண்டு. அதன்படி, மூவகை வினைகள், புத்திகள், குணங்கள், கூறுகள், பிறவிகள், பற்றுகள் ஆகியவை நீங்க வேண்டி நேற்று 3ம் நாள் உற்சவம் நடைபெற்றது.அதைெயாட்டி, அண்ணாமலையார் கோயிலில் நேற்று அதிகாலை சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு பூைஜகள், ஆராதனை, அபிஷேக வழிபாடுகள் நடந்தது. மேலும், கோயில் கருவறை எதிரில் அமைந்துள்ள பிரதோஷ மண்டபத்தில் 1,008 சங்காபிசேகம் நடந்தது.தொடர்ந்து, காலை 11.30 மணியளவில் ராஜகோபுரம் எதிரில் அமைந்துள்ள அலங்கார மண்டபத்தில் இருந்து மேளதாளம் முழங்க காலை உற்சவம் தொடங்கியது. வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும், தங்க பூத வாகனத்தில் சந்திரசேகரரும் மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

இரவு உற்சவம் 10 மணியளவில் தொடங்கியது. அப்போது, அலங்கார மண்டபத்தில் இருந்து புறப்பட்டு, மூன்றாம் பிரகாரத்தை வலம் வந்த பஞ்சமூர்த்திகள், ராஜகோபுரம் எதிரே 16 கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். அப்போது பஞ்சமூர்த்திகளுக்கு தீபாராதனை நடந்தது.பின்னர் `அண்ணாமலையாருக்கு அரோகரா' என பக்தர்கள் முழங்க, வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும், வெள்ளி மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியரும், சிம்ம வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாரும் (பெரியநாயகர்), வெள்ளி அன்ன வாகனத்தில் பராசக்தி அம்மனும், வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் மேளதாளம் முழங்க மாடவீதியில் பவனி வந்தனர்.விழாவில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மாடவீதி முழுவதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்து பஞ்சமூர்த்திகளை தரிசனம் செய்தனர்.

Tags : Thiruvannamalai Deepavirivu Festival ,Annamaliyar Pilgrims ,
× RELATED வாகன திருடர்கள் 2 பேர் கைது