வேலூர் பெண்கள் சிறையில் நளினி தொடர்ந்து 6வது நாளாக உண்ணாவிரதம்

வேலூர், டிச.4: வேலூர் பெண்கள் சிறையில், 6வது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் நளினியிடம் போராட்டத்தை கைவிட அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். பெண்கள் தனிச்சிறையில் உள்ள நளினி தனது கோரிக்கையை வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதத்தை கடந்த 28ம் தேதி தொடங்கினார்.

6வது நாளாக நேற்றும் உண்ணாவிரதம் இருந்து வரும் நளினியின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில், உண்ணாவிரதத்தை கைவிடுமாறு நளினியிடம் சிறை அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். நளினியின் கணவரான முருகனும் 4வது நாளாக நேற்றும் உண்ணாவிரதம் இருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories:

>