அரியலூரில் நாளை திமுக செயற்குழு கூட்டம்

அரியலூர், டிச. 3: அரியலூர் ராஜாஜி நகர் கலைஞர் இல்லத்தில் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நாளை நடக்கிறது.  மாவட்ட அவைத்தலைவர் தங்கதுரைராஜ் தலைமை வகிக்கிறார். கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் மற்றும் கட்சி ஆக்க பணிகள் குறித்து விவாதிககப்படவுள்ளது. எனவே மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், மாவட்ட அணி நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அரியலூர் மாவட்ட செயலாளர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

Tags : DMK Working Committee Meeting ,Ariyalur ,
× RELATED ஓசூரில் நாளை திமுக செயற்குழு கூட்டம்