சாலையை கடக்க முயன்றபோது கார் மோதி பிளம்பர் பரிதாப பலி

பாடாலூர், டிச. 3: பாடாலூரில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது கார் மோதி பிளம்பர் பலியானார். ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே உள்ள ஊத்தங்கால் பகுதியை சேர்ந்தவர் சுகிருஷ்ணன் (43). இவர் இப்பகுதியில் பிளம்பர் வேலை செய்து வந்தார். நேற்று இரவு பாடாலூர் பஸ் நிறுத்தம் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையை சைக்கிளில் கடந்தார். அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார், கிருஷ்ணன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே இறந்தார். விபத்து குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Plumber ,road ,
× RELATED ஜிஎச் பிளம்பர் தற்கொலை குற்றவாளிகளை...