வாய்க்காலில் விழுந்து மூதாட்டி பலி

ஜெயங்கொண்டம், டிச. 3: ஜெயங்கொண்டம் அருகே வாய்க்காலில் விழுந்து மூதாட்டி இறந்தார். ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாரியங்காவல் அம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் அலமேலு (85). இவருக்கு கணவன் மற்றும் குழந்தைகள் இல்லை. இவர் நேற்று அதிகாலையில் ல் தெருவில் நடந்து வந்தபோது வாய்க்காலில் விழுந்து கைகால் காயமடைந்து வாய்க்காலில் ஓடும் தண்ணீரில் இறந்து கிடந்தார். இந்த தகவல் கிடைத்ததும் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்துக்கு அவரது உறவினர் அப்பர் தகவல் தெரிவித்தார். இதுகுறித்து ஜெயங்கொண்டம் சப் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிந்து அலமேலுவின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் இன்ஸ்பெக்டர் தமிழரசி விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : Grandfather ,
× RELATED தனித்தனி சம்பவத்தில் இளம்பெண், மூதாட்டி, ஊழியர் தற்கொலை