×

பெரம்பலூரில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி

பெரம்பலூர்,டிச.3: பெரம்பலூரில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு நேற்று நடைபெற்ற விழிப் புணர்வு பேரணிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள், ஜூனியர் ரெட் கிராஸ் மாணவர்கள் கலந்து கொண்டனர். ஆண்டுதோறும் உலக எய்ட்ஸ் தினம் டிச.1ம் தேதி கடை பிடிக்கப்படுகிறது. இதையொட்டி பொதுமக்களுக்கு எய்ட்ஸ்நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெரம்பலூரில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் சாந்தா கொடியசைத்து தொடங்கி வைத் தார். பாலக்கரையில் தொடங்கிய இப்பேரணி சங்குபேட்டை, கடைவீதி, பழைய பேருந்து நிலையம் ஆகிய முக்கிய வீதிகள் வழியாக சென்று வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது.

இதேபோல் ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பு சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணிக்கு மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர் மதிவாணன் தலைமை வகித்தார். மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கருப்பசாமி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். மாவட்டக் கல்வி அலுவலர்கள் மாரி மீனாள், குழந்தைராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தப் பேரணி அரசுமேல்நிலைப்பள்ளியில் தொடங்கி, பழையபேருந்து நிலையம், காமராஜர் வளைவு, சங்குப்பேட்டை,ரோவர்வளைவு, ஸ்டேட் பேங்க், தேரடி, கடைவீதி, பழைய நகராட்சி அலுவலகம் வழியாக மீண்டும் அரசுப் மேனிலைப்பள்ளியை சென்றடைந்தது.இருவேறுஇடங்களில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வுப் பேரணிகளில் ஆயிரத் துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியும் கோஷமிட்டும் சென்றனர்.முன்னதாக எய்ட்ஸ் நோய் தடுப்பு கூறித்த விழிப்புணர்வு குறித்த உறுதி மொழி எடுக்கப்பட்டது.

Tags : awareness rally ,World AIDS Day ,Perambalur ,
× RELATED விழிப்புணர்வு பேரணி