திருப்பத்தூர் மாவட்டத்தில் முதல்வர் காப்பீடு திட்டத்தில் சென்னை தனியார் மருத்துவமனையில் 20 குழந்தைகளுக்கு இருதய அறுவை சிகிச்சை

திருப்பத்தூர், டிச. 1: திருப்பத்தூர் மாவட்டத்தில் முதல்வர் காப்பீடு திட்டத்தில் 20 குழந்தைகளுக்கு சென்னை தனியார் மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. திருப்பத்தூர் சுகாதார மாவட்டம் சார்பில் குனிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பச்சிளம் குழந்தைகள் முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கு இருதய பரிசோதனை முகாம் நேற்று நடைபெற்றது. இதில் ஜோலார்பேட்டை, ஆண்டியப்பனூர், பச்சூர், கே.வி.குப்பம், மாதனூர், திருவலம், கள்ளப்பாடி உள்ளிட்ட 10 வட்டாரங்களிலிருந்து பள்ளி சிறார் நடமாடும் மருத்துவ குழு மூலம் கண்டறியப்பட்ட பிறந்த குழந்தைகள் முதல் 19 வயதிற்கு உட்பட்ட இலவச இருதய சிறப்பு மருத்துவ முகாம் நேற்று ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது.

முகாமை, மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் சுரேஷ், கந்திலி சமுதாய வட்டார மருத்துவ அலுவலர் தீபலட்சுமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில், மாவட்டத்தில் இருந்து 10 வட்டாரங்களிலிருந்து 114 பள்ளி சிறுவர்கள் முதல் பச்சிளங் குழந்தைகள் கலந்து ெகாண்டனர். அவர்களுக்கு சென்னையில் இருந்து வந்துள்ள இருதய சிகிச்சை நிபுணர்கள் மற்றும் இருதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் இருதய பரிசோதனை செய்தனர். இதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 20 குழந்தைகளுக்கு இருதய பிரச்னைகள் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு இருதய வால்வு அடைப்பு சிகிச்சை மற்றும் இருதய அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்தனர். மேலும், அவர்களுக்கு முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை இலவசமாக செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Related Stories:

>