×

வேலூர் மத்திய சிறையில் முருகன் அறையில் மீண்டும் செல்போன் பறிமுதல் புகாரை மூடி மறைக்க முயற்சி செய்யும் சிறை நிர்வாகம்

வேலூர், டிச.1: வேலூர் மத்திய சிறையில் முருகன் அறையில் மீண்டும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் புகாரை மூடி மறைக்க சிறை நிர்வாகம் முயற்சி செய்வது சிறை காவலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 18ம் தேதி சிறைத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் முருகன் அறையில் இருந்து ஆன்ட்ராய்டு செல்போனை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு வேலூர் ஜேஎம்1 கோர்ட்டில் நடந்து வருகிறது. இதற்கிடையில், உயர் பாதுகாப்பு பிரிவில் 3வது பிளாக்கில் அடைக்கப்பட்டிருந்த முருகன், செல்போன் பறிமுதல் எதிரொலியாக 2வது பிளாக்கிற்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை செல்போன் ஆய்வு குழுவினர் நடத்திய ஆய்வில் முருகன் தங்கிருந்த 2வது பிளாக்கில் உள்ள ஒரு அறையில் இருந்து மீண்டும் ஒரு செல்போன் பறிமுதல் செய்துள்ளனர். அந்த செல்போனில் ஐஎம்இஐ எண் அழிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிறையில் செல்போன், பறிமுதல் செய்யப்பட்டால், உடனடியாக சிறை கண்காணிப்பாளர் மற்றும் டிஐஜிக்கு தகவல் தெரிவிக்கப்படும். பின்னர், அவர்களின் ஆலோசனையின் பேரில் காவல் நிலையத்தில் புகார் செய்வது தான் வழக்கம். ஆனால் நேற்று முன்தினம் செல்போன் பறிமுதல் தொடர்பாக தகவல்களை தனிப்பிரிவு போலீசாருக்கும் கூட தெரிவிக்காமல், காவல் நிலையத்திலும் புகார் அளிக்காமல் சிறை நிர்வாக அதிகாரிகள் மூடி மறைக்க முயற்சி செய்வது வரும் சம்பவம் சிறை காவலர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Murugan ,room ,Vellore Central Jail ,
× RELATED ராமேஸ்வரத்தில் முருகன் கோயில் வாசலை...