×

கார்த்திகை தீபத்திருவிழா வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர் வீதி உலா

திருவண்ணாமலை, டிச.1: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி நேற்று இரவு விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்தில் மாடவீதியில் மேளதாளம் முழங்க பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று காலை 5.30 மணிக்குமேல் 7.05 மணிக்குள் கொடியேற்றத்துடன் ெதாடங்குகிறது. விழாவின் தொடக்கமாக எல்லை காவல்தெய்வ வழிபாடு 3 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை இரவு துர்க்கை அம்மன் காமதேனு வாகனத்தில் மாடவீதியில் பவனி வந்தார்.

2ம் நாளான நேற்று முன்தினம் இரவு பிடாரி உற்சவம் நடைபெற்றது. விழாவில் அலங்கரிக்கப்பட்ட பிடாரியம்மன் மேளதாளம் முழங்க பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவின், 3ம் நாளான நேற்று விநாயகர் உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி அண்ணாமலையார் கோயிலில் நேற்று இரவு அநுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்துசாந்தி, மிருத்சங்கிரஹணம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இரவு 10 மணியளவில் விநாயகர் மூஷிக வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்திலும் மேளதாளம் முழங்க மாடவீதியில் பவனி வந்தனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் திரளான பக்தர்கள் மாடவீதியில் திரண்டு விநாயகரை வழிபட்டனர்.

Tags : Carnival Deepavathi Festival ,Vinayagar Street ,
× RELATED உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சி